ETV Bharat / state

நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு! - எடப்பாடி பழனிசாமி

திருநெல்வேலி: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy
author img

By

Published : Aug 16, 2020, 1:25 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் உள்ள ஏழு கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
நான்கு கால்வாய்களின் கீழ் உள்ள பயிர்களைக் காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு
நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, 1693.44 மி.கனஅடிக்கு மிகாமல் நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்ப் பகுதிகள் பாசன வசதி பெறும்.

இதையும் படிங்க: ’பஹ்ரைனுக்கு விமானம் இயக்க ஏற்பாடு’ - வைகோவிடம் உறுதியளித்த அமைச்ச
ர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.