ETV Bharat / state

அரசு கூறியது போல 'இரட்டிப்பு சம்பளம்' வழங்க வேண்டும் - ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்

author img

By

Published : May 12, 2020, 5:26 PM IST

நெல்லை: தமிழ்நாடு அரசு கூறியபடி, நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது போல், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கும் 'இரட்டிப்பு சம்பளம்' வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை  தூய்மைப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க கோரிக்கை  நெல்லை தூய்மைப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க கோரிக்கை  தூய்மைப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்  Sanitary Workers Demanding  Sanitary Workers Demanding Double Salary  Nellai Sanitary Workers Demanding Double Salary  Double pay for cleannig Workers
Sanitary Workers Demanding

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். குறிப்பாக, ஊரடங்கின் ஆரம்ப கட்டத்தில் கரோனாவைக்கண்டு ஒட்டுமொத்தமாக பொதுமக்களும் நடுங்கி, வீட்டிற்குள் முடங்கிய நிலையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மட்டுமே களத்தில் இறங்கி, பணிபுரிந்து மக்களைப் பாதுகாத்து வந்தனர்.

இவர்களின் சேவையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அளவில் மட்டுமே, நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அரசு அறிவித்துள்ள இரட்டிப்பு சம்பளம் தங்களுக்கும் கிடைக்கும் என்று, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளார்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படாமல் வழக்கம்போல், ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது.

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்

இதனால், ஏமாற்றம் அடைந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மனவேதனையுடன் தங்களது பணியைத் தொடர்கின்றனர்.

இது குறித்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், "நிரந்தரப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துகின்றனர். அதைத்தான் நாங்களும் செய்கிறோம்.

நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தான் குப்பை துர்நாற்றம் வீசுமா? எங்களுக்கு இல்லையா? அப்படி இருக்கும்போது எங்களை மட்டும் புறக்கணிப்பது ஏன்" என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் கரோனா தடுப்பு பணிக்காக இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.