ETV Bharat / state

புதிய கலங்கரை விளக்கம்: காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த மத்திய அமைச்சர் - மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்

திருநெல்வேலி: கூத்தன்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை மத்திய அமைச்சர்  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய கலங்கரை விளக்கம்
புதிய கலங்கரை விளக்கம்
author img

By

Published : Oct 29, 2020, 6:21 PM IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அழகர் கூத்தங்குழி கிராமம் கடற்கரை சூழ்ந்த பகுதியாகும். இங்கு புதிய கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

சுமார் 45 மீட்டர் உயரமுள்ள இந்த கலங்கரை விளக்கம் கடல் மட்டத்திலிருந்து 51 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. ரூபாய் 5.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கமானது சுமார் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் செல்லும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் சமிக்ஞைகளை அனுப்பும் திறன் உள்ளது.

மேலும் இங்குள்ள தொழில்நுட்ப தகவல் கருவிகள் மூலம் வெளிநாட்டு கப்பல்களின் போக்குவரத்து போன்றவற்றை கண்காணிப்பு செய்யும் வசதியும் உள்ளது.

இந்தப் புதிய கலங்கரை விளக்கம் மூலம் தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீன்பிடி படகுகள் பயன்பெறும்.

இந்த கலங்கரை விளக்கத்தை இன்று (அக்டோபர் 29) காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது, கூத்தன்குழியில் கலங்கரை விளக்கம் அமைய நிலம் ஒதுக்கீடு செய்து தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் கலங்கரை விளக்கமான இது ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கம்பீர அடையாளம் ஆகும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.