ETV Bharat / state

சிறைக்குள் சாதி பாகுபாடு ? - பாளை சிறையில் நடந்த சோகம்

author img

By

Published : Aug 10, 2021, 10:29 PM IST

தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சிறைக்கூடங்கள், நடைமுறையில் குற்றச் சம்பவங்களின் கூடாரமாக மாறி வருவதாக தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவதுண்டு. குற்றவாளிகளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்துவதற்காக கட்டமைக்கப்பட்ட அமைப்பு, இன்று சாதிய மோதல்களுக்கான விதை தூவியுள்ள சோகம் ஒன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் நிகழ்ந்துள்ளது.

சிறைக்குள் சாதி பாகுபாடு
சிறைக்குள் சாதி பாகுபாடு

திருநெல்வேலி: தனிச்சிறப்புகள் பலவற்றை தன்னுள் கொண்டுள்ள திருநெல்வேலியுடன் சாதிய மோதல்களும் ஒட்டிக் கொண்டுள்ளது பெரும் வரலாற்றுச் சோகமே! அந்த பெரும்கறையின் வடுவில் மீண்டும் ஒரு கறும்புள்ளியாய் சேர்ந்திருக்கிறது சமீபத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம்.

கொலை மிரட்டல் வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்ட முத்து மனோ என்ற சட்டக் கல்லூரி மாணவர், ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து கடந்த ஏப்.,22ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட அவர், சிறையில் அடைக்கபட்ட அரைமணி நேரத்தில் கைதிகள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சாதி ரீதியாக நடந்துள்ள இந்தச் சம்பவம் சிறை அதிகாரிகளின் உதவியுடன் நடந்துள்ளது என்ற இறந்த கைதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்ட, பதட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது திருநெல்வேலி.

சிறைக்குள் தொடரும் சாதிப்பாகுபாடு

தங்களின் குற்றத்தை உணர்ந்து திருந்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறைச்சாலைகளில் சாதிப்பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை உரக்க உணர்த்துகிறது இந்த துயரச் சம்பவம்.

பாளையங்கோட்டையில் இருக்கும் மத்திய சிறைச்சாலை நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறைச்சாலையில் அப்போது இருந்தே சாதிப்பாகுபாடு கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அங்கு குறிப்பிட்ட சாதிகளுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாளை சிறையில், சராசரியாக 900 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், 600 பேர் நீதிமன்றங்களின் தீர்ப்பின் படி, ஆயுள் மற்றும் பிற தண்டனைகளுக்காக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த சிறைக்குள் புதிதாக வரும் கைதிகளின் சாதி, மதம் ஆகியவைகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன.

சிறைக்குள் சாதி பாகுபாடு

தனித்தனி குவாரன்டைன்கள்

சிறையின் முதலாம் குவாரன்டைன் எனச் சொல்லப்படும் முதல் அடைப்பில், தலித் சமுதாயத்தைச் கைதிகளும், இரண்டாம் குவாரன்டைன் எனப்படும் இரண்டாவது அடைப்பில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கைதிகளும், புதுக்கட்டிடப் பிரிவில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைக்கப்படுகின்றனர். பிரச்னை இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் பிற கைதிகள் இந்த மூன்று சமூகத்தினருடன் ஒரே அறையில் அடைக்கப்படுகின்றனர்.

சிறைக்குள் நடைபெறும் சாதிய மோதல்களை தடுப்பதற்காகவே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக காரணம் கூறுகின்றனர் சிறைத்துறை அலுவலர்கள். கடந்த, 1996ஆம் ஆண்டு சிறைக்குள் நடந்த சாதி மோதலில், பலருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. அதனால் கைதிகளின் பாதுகாப்பிற்காக இந்த பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது என்கின்றன சிறை வட்டாரங்கள்.

கைதிகளின் பாதுகாப்புக்காக கடைபிடிக்கப்படும் நடைமுறை, சிறை அலுவலர்கள், காவலர்களுக்குள்ளும் பரவத் தொடங்கும் போது நிலைமை இன்னும் மோசமடைகிறது. அந்த கோரத்தின் விளைவுதான் கைதி முத்து மனோவின் மரணம்.

சிறை அலுவலர்களின் அலட்சியம்

தொன்னுறுகளின் தொடக்கத்தில் சாதி மோதல்களால் தகித்துக் கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், கடந்த இரண்டு தசாப்தங்களாக கொஞ்சம் அமைதி கொண்டிருந்தது. தற்போது சிறைக்குள் நடந்த கொலைச் சம்பவத்தால் மீண்டும் சாதி மோதலுக்கான கனல் முளைவிடத் தொடங்கியிருக்கிறது.

"குற்றவாளிகள் திருந்த வேண்டும் என்பதற்காவே சிறை தண்டனைகள் வழங்கப்படுகின்றன. சிறைக்குள் சாதி பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதும், அதற்கு துணை புரியும் சிறை அலுவலர்களின் நடவடிக்கைகள் கைதிகளுக்குள் சாதிய மோதல்களைத் தூண்டுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பாளை சிறையில், 240 முதல், இரண்டாம் நிலை காவலர்கள் பணிபுரிகின்றனர். கைதி முத்து மனோ தாக்கப்பட்ட போது, அங்குள்ள மூன்று பிளாக்குகளுக்கும் சேர்த்து, ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பில் இருந்துள்ளார். சிறை நிர்வாகத்தின் அஜாக்கிரதையே இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணம்" என்கிறார் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா.

முத்து மனோவின் மரணத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு, சம்பவத்தின் போது பணியில் இருந்த சிறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது எல்லாம் பதட்டத்தை தணிப்பதற்கான தற்காலிக தீர்வுகள்.

ஆனால், கைதிகளின் பாதுகாப்பு என்ற பெயரில், சாதி ரீதியாக கைதிகள் பிரித்து வைக்கப்படுவதும், சிறை அலுவலர்கள் அதற்கு துணை போய் தூண்டி விடுவதும் சிறைக்கு பல குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும். கைதிகளின் பாதுகாப்புக்கு வேறு வழியை கடைபிடித்து, சிறைக்குள் நிலவும் சாதி பாகுபாட்டை இல்லாமல் செய்வதே சமுதாயத்திற்கும் அனைத்து பிரச்னைக்கும் நிரந்தர தீர்வுவாக அமையும்.

இதையும் படிங்க: அரசு வருவாய்க்கு மதுபானக் கடைகள் மட்டுமே வழியா: வலுக்கும் டாஸ்மாக் எதிர்ப்பலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.