ETV Bharat / state

மருதாணியைச் சாப்பிடலாமா? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 5:12 PM IST

மருதாணியை அரைத்து அழகிற்காக கைகளில் வைத்துப் பார்த்திருப்போம், ஆனால் அதில் இருக்கும் அசாத்தியமான மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக மூத்த சித்த மருத்துவரும், சித்த மருத்து ஆராய்ச்சியாளருமான செல்லத்துரை கூறிய தகவல்களைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

நெல்லை: "மருதாணி" கடைகளில் விற்கும், அதை வாங்கி கை மற்றும் கால்களில் டிசைன்கள் போட்டால் சிவந்து அழகாகக் காட்சி அளிக்கும். இது தான் நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயம். இன்னும் சிலருக்கு மருதாணி இலையை அரைத்து கைகளில் வைக்கலாம் அதன் இலையை எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்க்கலாம் என்பது வரை தெரியும்.

ஆனால் இந்த மருதாணி அதையெல்லாம் கடந்து பல ஆயிரம் வருடங்களாக மக்களின் பல நோய்களுக்கு மருந்தாக இருந்து வருகிறது என வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் இதன் உண்மையான தமிழ்ப் பெயர் மருதோன்றி எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் சாற்றை எடுத்து புள்ளி வைக்கையில் சிவந்த மரு போல் தோற்றம் அளிக்கும். இதனால் மரு தோன்றி எனவும் தோன்றி எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருதாணி என மாற்றம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மருதோன்றி குறித்து சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர், தனது அகத்தியர் குணபாடம் என்ற நூலில்...

"சோணித தோடமெலாஞ் சொல்லாம லேகிவிடும்

பேணுவர்க்கி ரத்தமொரு பித்தம் போம் காணா

ஒருதோன்ற லென்னுமத னோதுமெழின் மாதே

மருதோன்றி வேரால் மறைத்து"

என, மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருதோன்றியின் விதையை நெருப்பில் போட்டு அதில் இருந்து வரும் புகையை நுகரச் செய்தால் நலன் பெறுவார்கள் என்று கூறியிருப்பார். இப்படிப் பல மருத்துவ குணம் கொண்ட மருதாணி குறித்துத் தெரிந்துகொள்வோம்.

மருதாணியைச் சாப்பிடலாமா? சித்த மருத்துவம் சொல்வது என்ன?
மருதாணியைச் சாப்பிடலாமா? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

இந்த மருதாணி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, ராஜஸ்தானில் மருதாணி சாகுபடி என்பது முக்கியமானதாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மருதாணி, வெளிநாடுகளுக்கு அழகு சாதனப் பொருட்கள், நறுமண தயிலங்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்காக ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து, மூத்த சித்த மருத்துவரும், சித்த மருத்து ஆராய்ச்சியாளருமான செல்லத்துரை ஈடிவி பாரத் தமிழ் இணையதளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அவர் கூறிய மருதாணியின் மருத்துவ நன்மைகள் என்ன? என்பதைப் பார்க்கலாம்.

தோல் தொடர்பான நோய்களுக்குத் தீர்வாகும் மருதாணி: மருதாணி இலை பொதுவாகத் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். சொரியாசிஸ்சில் தொடங்கி குஷ்டம் போன்ற பெரிய தோல் நோய்களுக்கு மருதாணி இலையை அரைத்துத் தேய்ப்பது சிறந்த மருத்துவ பலனைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தூக்கமின்மை பிரச்சனைக்கு முடிவு கட்டும் மருதாணி பூக்கள்: மருதாணி செடியில் இருந்து கிடைக்கும் பூக்கள் தூக்கம் இன்மை பிரச்சனையால் அவதிப்படும் மக்களுக்கு மிகுந்த பலன்தரக்கூடியது எனச் செல்லத்துரை கூறியுள்ளார். மருதாணி பூக்களை பறித்து வந்து அதை ஒரு துணியில் வைத்துக் கட்டி நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் தலையணைக்குக் கீழே வைத்துத் தூங்கினால் நல்ல உறக்கம் வருமாம். அதேபோல, உங்கள் வீட்டின் படுக்கையறையில் மருதாணி பூக்களை ஜாடியில் வைத்தால் அழகாகவும் இருக்கும் அமைதியான தூக்கத்திற்கும் வழி வகை செய்யும்.

இரத்தத்தில் உள்ள நச்சுக்களைச் சுத்தம் செய்யும் மருதாணி: மருதாணியின் இலை மற்றும் பூ இரண்டுமே இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையைச் சுத்தம் செய்யும் பண்புடையது எனச் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளரான செல்லத்துரை கூறியுள்ளார். மருதாணியின் இலை மற்றும் பூவை எடுத்து நிழலில் உலர வைத்து பொடியாக்கி பாட்டிலில் பத்திரம் செய்து அதைத் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதும் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அகன்று உடல் சுறுசுறுப்பு பெறுவதுடன் ஆரோக்கியமும் அடையும்.

கை மற்றும் கால்களில் மருதாணி வைப்பதற்கான காரணம்: உடல் சூட்டைத் தணிக்கிறது, பித்தத்தைக் குறைக்கிறது, பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. எனவேதான் வீடுகளில் திருமணம், திருவிழா உள்ளிட்ட பல்வேறு பண்டிகை மற்றும் விஷேசங்களின்போது பெண்கள் கைகளில் மருதாணி வைக்கின்றனர். இந்த மருதாணியைப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் வைத்து அதன் பலனைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மருத்துவர் செல்லத்துரை கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, பால்வினை நோய், மன அழுத்தம், இரத்த அழுத்தம், இருதய நாளங்களில் இரத்த அடைப்பு உள்ளிட்ட பல்வேறு தீராத நோய்களுக்கும், தீவிரமான நோய்களுக்கும் இந்த மருதாணி சிறந்த மருந்தாக உள்ளது எனச் சித்த மருத்துவம் கூறுகிறது. இது குறித்து மக்கள் தெரிந்துகொண்டு சித்த மருத்துவத்தின் பலனைப் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். ஆனால், நீங்கள் தன்னிச்சையாக எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் வீடுகளின் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இந்த மருதாணியின் பலனைப் பெறலாம்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியால் இளைஞர்கள் இறப்பா? - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.