திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கட்டட ஒப்பந்ததாரர் கண்ணன். இவரை ஜூன் மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்தனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் வைத்து முத்துமனோ என்ற கைதி சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பழிக்குப் பழியாகவே கண்ணன் கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப்படை அமைத்து ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை காவல் துறையினர் கைது செய்யாமல் பாரபட்சம் காட்டுவதாக கண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், கண்ணன் கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட அதிசய பாண்டி என்ற நபரை தனிப்படை காவலர்கள் இன்று (ஜூலை.30) கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கார் கவிழ்ந்து விபத்து: கட்டட ஒப்பந்ததாரர் உயிரிழப்பு!