ETV Bharat / state

சகோதரியை கொலை செய்துவிட்டு போலீசிடம் சரணடைந்த தம்பி! - தம்பி

நெல்லை: குடும்பத்தகராறு காரணமாக சகோதரியை கொலை செய்துவிட்டு சரணடைந்த சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை
author img

By

Published : Mar 27, 2019, 4:12 PM IST

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவருக்கும் நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கனிமொழிக்கும் கடந்த சில மாதங்களுக்குமுன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு ஏற்படும்போதெல்லாம்,கனிமொழி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் கனிமொழிக்கு வழக்கம்போல்கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது பெற்றோர் வீட்டிற்கும் வந்துள்ளார்.

அப்போது, கனிமொழியின் பெற்றோரும், சகோதரர் சுந்திரபாண்டியனும் அவரை கணவருடன் சேர்ந்து வாழும்படி வற்புறுதியுள்ளனர்.

ஆனால் அதற்கு கனிமொழி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுந்திரபாண்டியன், நேற்று இரவு கனிமொழி தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நெல்லை டவுன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் குடும்பத்தகராறு காரணத்தால் அக்காவை, அவரது தம்பியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் லெனின். இவர் வாடகைக்கு வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருகின்றார். இவருக்கும் நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கனிமொழி என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கனிமொழி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. கனிமொழியின் பெற்றோர்களும் சமாதானம் செய்து ஏர்வாடியில் கொண்டுவிட்டுள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது பெற்றோர் வீட்டிற்கும் வந்துள்ளார். நேற்று இரவு கனிமொழியை அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சுந்திரபாண்டியன், கனிமொழியை அவரது கணவருடன் சேர்ந்து வாழும்படி வற்புறுதியுள்ளனர். ஆனால் அதற்கு கனிமொழி மறுத்துள்ளார் இதனால் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்தரம் அடைந்த அவரது தம்பி சுந்திரபாண்டியன் நேற்று இரவு கனிமொழி தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுது அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நெல்லை டவுண் காவல்நிலையத்தில் சரணடைந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காவை அவரது தம்பியை கொலை செய்த சம்பவம் இந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.