ETV Bharat / state

'தமிழ்நாட்டில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது' - வைகோ

author img

By

Published : Dec 28, 2022, 4:34 PM IST

தமிழ் அறிஞர்கள் வளர்த்த இந்த திராவிட இயக்க மண்ணில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ

திருநெல்வேலி: மதிமுக கட்சியின் முக்கிய பிரமுகரான டேனியல் ஆபிரஹாம் இல்லத் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களும், அவரவர் விருப்பப்படி சடங்குகளை நிகழ்த்தி திருமணங்களை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

ஆனால், இந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் போராடுகின்ற பெரு சக்தியாக தமிழ்நாடு திகழ்கின்றது. தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திமுக ஆட்சி அனைத்தும் மத நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை தரும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் மத நம்பிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை தேர்தலிலும் மாற்றம் நிகழும் என சொல்லும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் கருத்து பட்டப் பகலில் காண்கின்ற கனவு. தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது.

2024ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான இதே கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும். பெரியார் தொடங்கி பல்வேறு தமிழ் அறிஞர்கள் வளர்த்த இந்த திராவிட இயக்க மண்ணில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது. சேது சமுத்திரத் திட்டம் மிகவும் அவசியமான ஒன்று.

தூத்துக்குடி துறைமுகத்தின் இந்தியாவின் வளர்ச்சிக்கும் தென்னாட்டு வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டம் வழிவகை செய்யும். தென் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுறு திட்டமான செண்பகவல்லி அணை சீரமைப்பு குறித்து மூன்று முறை கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி இருக்கிறேன். அதில் உள்ள பிரச்னையைைப் புரிந்து கொண்ட கேரள அரசு அதை செயல்படுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது” என்றார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கிறதா மநீம? - கார்த்தி சிதம்பரம் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.