ETV Bharat / state

தலைவரானார் அண்ணாமலை: கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதையடுத்து, பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

tamilnadu bjp leader  bjp members celebrated for annamalai selected as tamilnadu bjp leader  thirunelveli news  thirunelveli latest news  thirunelveli bjp members celebration  திருநெல்வேலியில் பாஜகவினர் கொண்டாட்டம்  திருநெல்வேலி செய்திகள்  தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்  தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை  தமிழ்நாடு பாஜக தலைவர்  பாஜகாவினர் கொண்டாட்டம்  எதற்காக இனிப்பு என தெரியாமல் வாங்கிய மக்கள்
நமக்கு லட்டு தான் முக்கியம்...
author img

By

Published : Jul 10, 2021, 4:01 PM IST

திருநெல்வேலி: பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை திருநெல்வேலியில் பாஜகவினர் நேற்று (ஜூலை 9) கொண்டாடினர்.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய இணை அமைச்சரானதற்குப் பின்னர், அப்பதவிக்கு துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை நியமிக்கப்படுவதாக தேசிய தலைமை அறிவித்தது.

அதன்படி, தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை செயல்படத் தொடங்கியுள்ளார். அவரது வெற்றியை தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜா தலைமையில், 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே சாலையில் பட்டாசு வெடித்து, அவ்வழியாகச் சென்ற பேருந்துகளில் பயணித்தவர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோருக்கு லட்டு வழங்கினர்.

இதையும் படிங்க: சுனில் கவாஸ்கர் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய நிகழ்வுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.