ETV Bharat / state

பாஜக பெண் வேட்பாளரைத் தாக்கிய திமுகவினர்? - காவல் துறை விசாரணை

author img

By

Published : Feb 19, 2022, 10:29 PM IST

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையத்திலிருந்த திமுக நிர்வாகிகள், பாஜக வேட்பாளர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாஜக பெண் வேட்பாளர் பலத்த காயமடைந்தார்.

பாஜக - திமுக இடையே மோதல்
பாஜக - திமுக இடையே மோதல்

திருநெல்வேலி: மாநகராட்சி வார்டு 26-க்கு உள்பட்ட வாக்குச்சாவடி எண் 148இல் மாலை 5.45 மணி அளவில் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் புதிதாக வந்ததாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணிக்கு வரக்கூடிய வாக்குச்சாவடி முகவர் மட்டுமே வாக்குப்பதிவு நிறைவுபெறும் வரை இருக்க வேண்டும் எனத் தேர்தல் அலுவலர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக வந்த முகவரைத் தடுத்து நிறுத்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாரியம்மாள் என்பவர் முயற்சி செய்ததாகவும் அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாரியம்மாள் வாக்குச்சாவடி மையத்தில் உற்ற உயரமான மேடையிலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. திமுக பிரமுகர் தாக்கி தள்ளிவிட்டதாலேயே அவர் காயமடைந்ததாக பாஜக முகவர்கள், கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட முகவர்கள் ஒன்றுகூடி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து பிரச்சினை நடைபெற்ற இடத்திற்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வரத்தொடங்கினர். தாக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்த வேட்பாளர் மாரியம்மாள் மயங்கிய நிலையில் இருந்ததையடுத்து, அவரை அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பாஜக - திமுக இடையே மோதல்

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் காவல் துறையினர் திமுக பிரமுகர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள், அங்கிருந்த முகவர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: தலைநகரில் அரங்கேறிய அராஜகம்: வாக்குச்சாவடிக்குள் கத்தியுடன் புகுந்த திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.