ETV Bharat / state

நெல்லையில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு? - vijay nelson

பீஸ்ட் பட வெளியீட்டின் போது, ரசிகர்கள் கச்சேரி, வெடிவெடிப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் அதையும் மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ரசிகர்கள் மீது வழக்கு நடவடிக்கை பாயுமா
ரசிகர்கள் மீது வழக்கு நடவடிக்கை பாயுமா
author img

By

Published : Apr 13, 2022, 10:52 AM IST

திருநெல்வேலி: ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று (ஏப்.13) திட்டமிட்டபடி படம் வெளியானது.

அந்தவகையில் நெல்லை சிட்டியில் மொத்தம் 6 திரையரங்குகளில் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் நெல்லையில் நேற்று (ஏப்.12) பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

அதன்படி திரையரங்கிற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தவோ, பேனர்கள் வைக்கவும் போலீசார் தடை விதித்தனர். மேலும் இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை சார்பில் அனைத்து திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.

கடந்த 2ஆம் தேதி பீஸ்ட் ட்ரைலர் வெளியான போது நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ட்ரைலர் பார்த்த வேகத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளைச் சேதப்படுத்தியும் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

நெல்லையில் 6 தியேட்டரில் பீஸ்ட் வெளியானதை தடையை மீறி கொண்டாடிய ரசிகர்கள்

இதன் எதிரொலியாகவே நெல்லை மாநகரில் பீஸ்ட் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அனைத்து திரையரங்கம் முன்பும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக வஜ்ரா வாகனங்களும் திரையரங்கிற்கு வெளியே நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் காவலர்களின் தடையை மீறி சில திரையரங்குகளில் ரசிகர்கள் வழக்கம்போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாகப் பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள திரையரங்கில் விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் இன்னிசை கச்சேரி நடத்தி நடிகர் விஜயின் பாடல்களுக்கு உற்சாகம் பொங்க ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

பின்னர் திரையரங்கில் அமர்ந்து உற்சாகத்துடன் பீஸ்ட் படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். இதற்கிடையில் தடையை மீறி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக மாநகர காவல்துறை திரையரங்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே தடையை மீறிய விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

இதையும் படிங்க:நாளை முதல் ‘பீஸ்ட்’ : விஜய் ரசிகர்களால் திருவிழா கோலத்தில் வேலூர் திரையரங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.