நெல்லை மாவட்டத்தில் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேர்தல் திருவிழா, கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி, துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், பேனர்கள் வைப்பது என பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சமாதானபுரம் வழியாக வண்ணார்பேட்டை வந்தடைந்தது. இந்த பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்டன.