ETV Bharat / state

'சுதந்திர போராட்ட வீரர்களை ஜாதிய தலைவர்களாக்கியது திராவிட இயக்கங்களின் சாதனை' - அர்ஜுன் சம்பத்

சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை ஜாதிய தலைவர்களாக கட்டமைத்திருப்பது திராவிட இயக்கங்களின் சாதனை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களை ஜாதிய தலைவர்களாக்கியது திராவிட இயக்கங்களின் சாதனை - அர்ஜுன் சம்பத்

author img

By

Published : Jul 25, 2022, 10:35 PM IST

திருநெல்வேலி: 75ஆவது சுதந்திர தின நாள் அமுத விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரத ஊர்வலம் நடைபெற்ற வருகிறது. இதில் சுதந்திர வீரர்களின் வீடுகள், அவர்களின் நினைவிடங்கள், மண்டபங்களில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்றைய தினம் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் ஆகியோர் தேசிய கொடியுடன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், “சுதந்திர தின அமுதவிழா கொண்டாட்டத்தில் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி வருவகிறோம். அவர்களது இடங்களுக்கு செல்வது மிகப்பெரிய பாக்கியம். சுதந்திர போராட்ட வீரர்கள் போன்ற நாட்டின் முக்கியமான தலைவர்களை ஜாதிய தலைவர்களாக கட்டமைத்து இருப்பது தான் திராவிடத்தின் சாதனை. ஜாதிய கட்டமைப்புக்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடக்கி வைத்திருப்பது துரதிஷ்டவசமானது” என்றார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேச விரோதிகள் இது போன்ற கலவரங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தஞ்சாவூர் மைக்கேல் பெட்டியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்திலும், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்திலும் பாரதிய ஜனதா கட்சியும் இந்து மக்கள் கட்சியும் சரியான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளதாகவும் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் செயல்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர்களை ஜாதிய தலைவர்களாக்கியது திராவிட இயக்கங்களின் சாதனை - அர்ஜுன் சம்பத்

மேலும் நாட்டின் 75ஆவது சுதந்திர தின அமுதவிழா கொண்டாட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசியக்கொடி வழங்கி இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ‘தமிழ் சினிமா போலீசாரை விட தமிழ்நாடு போலீசார் மிக கேவலமாக உள்ளனர்’ - இன்பதுரை கடும் விமர்சனம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.