திருநெல்வேலியை சேர்ந்த கந்தன் (19) என்பவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று (ஜூலை 4) தாம்பரத்திலிருந்து, நெல்லைக்கு ரயில் ஏறினார். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவர் ரயில் கதவின் அருகே அமர்ந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு ரயிலி நிலையம் அருகே வந்தபோது, பத்து மணி அளவில் எதிர்பாராத விதமாகக் கந்தனின் கால் பிளாட்பார்மில் மோதி காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலயே இறங்க முயற்சித்தபோது, மயங்கி விழுந்துள்ளார்.
இதையறிந்த ரயில்வே காவலர் தயாநிதி ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மயங்கி விழுந்திருந்த கந்தனை தோளில் தூக்கிக்கொண்டு, ஆறாவது நடைமேடையிலிருந்து நுழைவு வாயில் வரை சென்றுள்ளார். இதையடுத்து கந்தன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கட்டார். இந்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: நெல்லை டூ டெல்லி - பைக்கில் பேரணியாக செல்லும் ரயில்வே போலீசார்