ETV Bharat / state

கைதிகள் பல் பிடுங்கிய விவகாரத்தில் அதிரடியில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்! - Tirunelveli news

நெல்லையில் பல்வீர் சிங் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா மூன்று காவல் நிலையங்களில் திடீரென அதிரடி ஆய்வை மேற்கொண்டார்.

tirunelveli
பல் பிடுங்கிய விவகாரம்
author img

By

Published : Apr 19, 2023, 1:20 PM IST

பல் பிடுங்கிய விவகாரம்: அதிரடி ஆய்வில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் சரக ஏஎஸ்பி-யாக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் நெல்லை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில வைத்து இரண்டாவது நாளாக விசாரணையை மேற்கொண்டார்.

நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் மொத்தம் பாதிக்கப்பட்ட 10 பேர் அமுதா ஐஏஎஸ் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று மட்டும் சுபாஷ், வேத நாராயணன், மாரியப்பன் ஆகிய 3 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விசாரணை அலுவலகத்திற்கு வருகை தந்தது, விசாரணை அதிகாரி அமுதாவை சந்தித்து இது குறித்து பேசினார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட விசாரணையை முடித்துவிட்டு அதிகாரி அமுதா அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிளம்பி நேராக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு திடீர் ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கு காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து பணிக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. மேலும் ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.

பின்னர் விசாரணை அதிகாரி அமுதா காவல் நிலையம் முழுவதும் தீவிர ஆய்வு நடத்தினார். குறிப்பாக கணினி அறக ஆய்வாளர் அறை முதல் காவலர்கள் ஓய்வு அறை வரை உட்பட அனைத்து அறைகளிலும் தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து வெளியே வந்த அவர் சிசிடிவி கேமரா அமைவிடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அருகில் இருந்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் சென்று, அதிகாரி அமுதா சிறிது நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனும் உடன் இருந்தார். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆய்வு முடித்துக் கொண்டு நேராக விகேபுரம் கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களிலும் விசாரணை அதிகாரி தனது ஆய்வு பணியை தொடர்ந்தார். மேற்கண்ட மூன்று காவல் நிலையங்களில் தான் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கியதாக பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் தான் மூன்று காவல் நிலையங்களிலும் அதிகாரி அமுதா திடீர் ஆய்வு செய்துள்ளார். பல் பிடுங்கிய விவகாரத்தில் இரண்டு கட்ட விசாரணை முடிவு பெற்றுள்ள நிலையில், உயர் மட்ட அதிகாரியின் இந்த ஆய்வு பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் காவல் நிலையத்தில் நேரடி ஆய்வு செய்தது ஆகியவற்றின் அடிப்படையில் அவர் ஆய்வறிக்கையை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்:2ஆம் கட்ட விசாரணையில் மூன்று பேர் ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.