ETV Bharat / state

திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு! - Tirunelveli news

நெல்லையில் திமுக எம்எல்ஏ மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய அதிமுக போஸ்டரால் பரபரப்பு

author img

By

Published : Dec 27, 2022, 11:09 PM IST

திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய அதிமுக போஸ்டரால் பரபரப்பு!

திருநெல்வேலி: நெல்லை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக வண்ணாரபேட்டை திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் பெரு நிறுவனங்களும், பெரிய ஜவுளிக்கடைகளும் அதிக அளவில் வந்ததன் காரணமாக அதிக போக்குவரத்து நெருக்கடி மற்றும் மக்கள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த பேருந்து நிறுத்தம் மாநகராட்சி மற்றும் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த நேரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் பாலத்தின் இரு புறங்களிலும் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்தம் இருந்த இடத்தில் மீண்டும் புதியதாக பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இதற்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரின் நிதி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வந்தன.

பேருந்து நிறுத்தம் தனியார் ஜவுளி நிறுவனத்தை மறைத்துக் கட்டி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தன் மீது தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த பேருந்து நிறுத்தம் நேற்றைய தினம் திடீரென இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன . ரூ.12 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்த தரை தள ஓடுகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தி வந்த சூழலில் திடீரென அந்த பணியும் தற்காலிகமாக கைவிடப்பட்டது. எதற்காக இந்தப் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது, எதற்காக இடிக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில், மக்கள் வரிப்பணத்தை வீணடித்த பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப் மீது திருநெல்வேலி மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெல்லை மாநகர் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேச ராஜா பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதினை விமர்சித்தவர் ஒடிஷாவில் சந்தேக மரணம்? - அடுத்தடுத்த 2 மரணங்களால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.