இது தொடர்பாக ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வெற்றி குறித்து தொடர்ந்து உண்மைக்கு மாறான பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என்று நினைக்கிறார். முக ஸ்டாலினை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது; அவரைத் தவறாக வழி நடத்துகின்றனர்.
ராதாபுரம் தேர்தலில் தோல்வியடைந்த அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது அவரை வெளியே அனுப்பியது தொடர்பாகவும் தபால் வாக்குகள் செல்லாது என அறிவித்ததையும் வழக்கில் சேர்த்துள்ளார். நான் தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் உச்சநீதிமன்றம் தலையிட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தலாம். ஆனால் அதன் முடிவை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
இப்போது நான் உங்கள் முன்னிலையில் சொல்கிறேன், மறுவாக்கு எண்ணிக்கையிலும் நான் தான் வெற்றி பெற்றேன். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது குறித்து நான் வெளியே எதுவும் கூறவில்லை" என்று விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: சசிகலா நாளை தமிழ்நாடு வருகை: வேலூரில் அமமுகவினர் வைத்த போனர்கள் அகற்றம்!