ETV Bharat / state

நெல்லையில் தலைவிரித்தாடிய திமுக உட்கட்சிப் பூசல்; அதிரடி நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை - முழுப் பின்னணி! - திமுகவில் உட்கட்சி பூசல்

நெல்லை திமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டிய நிலையில், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாப் நீக்கப்பட்டுள்ளார். அண்மையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண் முன்பே திமுகவினர் மோதிக்கொண்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்துல் வகாப் நீக்கத்திற்கு இந்த மோதலும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

DMK leader Duraimurugan
துரைமுருகன்
author img

By

Published : May 21, 2023, 7:29 PM IST

நெல்லை: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் அப்துல் வகாப். இவர் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாபை திமுக தலைமை கழகம் நீக்கியுள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், 'நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் டிபிஎம் மைதீன் கான் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்...

நெல்லை மத்திய மாவட்ட திமுகவில், மாநகர திமுக நிர்வாகிகள் ஒரு அணியாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா தரப்பினர் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மைதீன் கான் மாலை ராஜா அணியைச் சேர்ந்தவர். அப்துல் வகாப் தனக்கு கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான நிர்வாகிகள் உடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். குறிப்பாக, அவரால் மாநகர திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட சுப்ரமணியன் தனியாக செயல்பட்டு வருகிறார் . எனவே, பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் மாநகர திமுக செயலாளர் ஆதாரவாளர்களை மிரட்டும் சம்பவமும் நடந்தது.

அப்துல் வகாப்
அப்துல் வகாப்

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ஆதரவால் கவுன்சிலரான சரவணன், நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், மேயரான பிறகு அப்துல் வகாப் அவரை வெளிப்படையாக மிரட்டி தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், மேயர் சரவணன் வீட்டு ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டது. எனவே, மேயர் சரவணன் அப்துல் வகாப்பின் எதிரணியான மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் உடன் இணைந்து செயல்பட தொடங்கினார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அப்துல் வகாப், தனது ஆதரவு கவுன்சிலர் மூலம் நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக, மேயருக்கு எதிராக பிரச்னையை கிளப்பி வந்தார். மேயர் சரவணன் தனக்கு வேண்டிய திமுக நிர்வாகிகளை மேயர் அறையில் வைத்துக் கொண்டு ஒப்பந்ததாரர்களுடன் கமிஷன் கேட்பதாகவும், அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.

மேலும், மேயரை மாற்றக் கோரி துணை மேயர் ராஜூ உள்பட அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் சமீபத்தில் திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து முறையிட்டனர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஆளுங்கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட மேயரை மாற்றக் கோரி பிரச்னை செய்து வந்தது, திமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து அப்துல் வகாப்பின் நடவடிக்கை பிடிக்காததால் பல மூத்த நிர்வாகிகளும் அவருக்கு எதிராக திமுக தலைமையிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர். மேலும், உளவுத்துறை அறிக்கையும் அப்துல் வகாப்பிற்கு எதிராகவே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், திமுக தலைமை அப்துல் வகாப் மீது ஒரு கண் வைத்திருந்தததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி, மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நெல்லை சென்றிருந்தார். அப்போது, துரைமுருகனை வரவேற்பதில் பிரச்னை ஏற்பட்டு, துரைமுருகன் கண் முன்னே அப்துல் வகாப் ஆதராவளர்களும், மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

துரைமுருகன் கண் முன்னே திமுகவினர் மோதல்
துரைமுருகன் கண் முன்னே திமுகவினர் மோதல்

குறிப்பாக, மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் மேயர் சரவணன் இருவரையும் துரைமுருகனை வரவேற்கவிடாமல் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் அடாவடியில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அமைச்சர் துரைமுருகன் அப்துல் வகாப் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் முன்பு அடித்துக்கொண்ட திமுகவினர்.. நெல்லையில் பரபரப்பு!

இதுபோன்ற சூழ்நிலையில்தான் அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் நீக்கப்பட்டதற்கு துரைமுருகன் முன்பு நடந்த மோதல் சம்பவமும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மைதீன் கானுக்கு முதல் முறையாக மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், தற்போது திமுகவில் மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவராக முன்னர் பதவி வகித்து வந்தார்.

கடந்த 2006-11ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மைதீன் கான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, திமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் கூலிப்படையினர் காவல் ஆய்வாளரை பட்டப் பகலில் நடுரோட்டில் வைத்து வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்தனர். அப்போது அமைச்சர் மைதீன் கான் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வழியாக வந்த போதிலும், குற்றவாளிகளை கோட்டை விட்டதுடன், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆய்வாளரை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் காப்பாற்றத் தவறியதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தன.

இது போன்ற சர்ச்சையில் சிக்கியவர்தான் மைதீன் கான். அதேசமயம், தற்போது அப்துல் வகாப்புக்கு மாற்றாக இளம் நிர்வாகிகள் யாருக்காவது பொறுப்பு வழங்கினால், மீண்டும் கட்சிக்குள் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் மூத்த நிர்வாகி என்ற முறையில் மைதீன் கானை கட்சித் தலைமை நியமித்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: 'மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கிறார்' அதிமுக பேரூராட்சி துணைத் தலைவர் மீது கவுன்சிலர்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.