ETV Bharat / state

பைக்கில் சென்ற மர்ம கும்பல் சாதி பெயரைச் சொல்லி தாக்குதல்.. நெல்லையில் தொடரும் சாதி பாகுபாடு அவலம்! - Caste attack

A private company employee attacked: இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியரை மர்ம கும்பல் வழிமறித்து சாதி பெயரைச் சொல்லி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

caste
சாதிய தாக்குதல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 4:00 PM IST

நெல்லையில் மீண்டும் சாதிய தாக்குதல்

திருநெல்வேலி: சிவந்திபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் நபரை வழிமறித்து ஊர் மற்றும் பெயரை விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நபர் தனது ஊர் பெயரைச் சொன்னவுடன் மர்ம கும்பல் கீழே கிடந்த நபரை கல்லால் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவந்திபட்டி காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி ரீதியான கொலைகள், மோதல்கள் நடைபெற்று வரும் சூழலில் தனியார் நிறுவன ஊழியர் சாதி பிரச்னையால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:செயற்கை நுண்ணறிவு மூலம் கூகுளில் பொருட்கள் விற்பனை... சிறு, குறு வியாபாரிகளை ஊக்குவிக்க கூகுள் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.