திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகளவில் பிரசவம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 3 நாள்களுக்கு முன்பு பிஸ்மி என்ற இந்த சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்தது. இத்தொடர்ந்து அவர் பிரசவ வார்டில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று(ஜூன் 18) பிரசவ வார்டில் உள்ள பக்காவாட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் பெயர்ந்து கீழே விழுந்தது.

இதனைக் கண்ட பிஸ்மி குழந்தையை பத்திரமாக அரவணைத்துக் கொண்டார். அப்போது அவரது முதுகில் கற்கள் விழுந்தன. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கலைத்தனர். இதையடுத்து திருநெல்வேலி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு புனரமைப்பு பணிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஆயுதப்படை பெண் காவலரிடம் 2 சவரன் செயின் பறிப்பு