ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு 46 கிலோவில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட கேக்!! - Udhayanidhi Stalin birthday

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வயதைக் குறிக்கும் வகையில் நெல்லையில் 46 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டி திமுக நிர்வாகிகள் கொண்டாடினர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட கேக்

author img

By

Published : Nov 27, 2022, 9:56 AM IST

நெல்லை: திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகர திமுக சார்பில் கடந்த ஒரு வாரமாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக நெல்லை சந்திப்பு பகுதியில் மாநகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினின் 46 வயதைக் குறிக்கும் வகையில் 46 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தச்சநல்லூர் பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன் கேக் வெட்டி அருகிலிருந்த நிர்வாகிகளுக்கு வழங்கினார். அந்த கேக்கில் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி ஆகியோரது உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டிபிஎம்.மைதீன்கான், மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன் உட்படப் பலர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட கேக்

இதையும் படிங்க: தொழிலதிபர் சாவில் திருப்பம்: கள்ளக்காதலியே கொலை செய்தது அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.