ETV Bharat / state

விவசாயி வெட்டிப் படுகொலை; 3 பேர் கைது; நெல்லையில் நடந்தது என்ன? - Crime News

முன் விரோதம் காரணமாக விவசாயி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 7, 2023, 1:40 PM IST

நெல்லை: நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரைச் சேர்ந்தவர், அருணாச்சலம் (60). விவசாயம் செய்துவரும் இவர் நேற்று (ஜூலை 06) அதே ஊரில் உள்ள தனது மகள் முத்துச்செல்வியின் வீட்டு முன்பு திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று விவசாயி அருணாச்சலத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக, வெட்டுக் காயம் அடைந்த அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசாருக்குத் தகவல் தெறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டனர். அப்போது முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தளபதி சமுத்திரம் மேலூர் பெரியகுளத்தில் மீன் குத்தகைக்கு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொது இடங்களில் பெண்கள் உஷார்.. ஆபாசமாக போட்டோ எடுத்து ஆன்லைனில் விற்பனை!

இந்த[ பிரச்சனையில் விவசாய சங்கத்தினருக்கும், வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏர்வாடி போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு சம்மந்தமாக நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இன்றி இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உயிரிழந்த விவசாயி அருணாசலம் சேர்க்கப்பட்டு இருந்தார்.

அவர் இன்று (ஜூலை 07) சாட்சி சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நேற்று (ஜூலை 06) இரவு முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அருணாச்சலத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஏர்வாடி போலீசார் இது சம்பந்தமாக தளபதி சமுத்திரம் மேலூரைச் சேர்ந்த சுரேஷ், சுடலைக்கண்ணு மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள முருகன் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.