ETV Bharat / state

"99% பெண்களுக்கு உதவி தொகை போய் சேர வாய்ப்பே இல்லை" - கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி! - மகளீர் உதவி தொகை

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை என்றும் அதன் விளைவு அனைத்தும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி

author img

By

Published : Jul 8, 2023, 8:18 PM IST

Updated : Jul 8, 2023, 8:45 PM IST

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி

திருநெல்வேலி: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருநெல்வேலி வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தி உள்ளது.

இது பெண்களை ஏமாற்றம் செயலாக உள்ளது ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிக்கு உரிமை தொகை கிடையாது என்பது நூற்றுக்கு 99% பேருக்கு இந்தத் தொகை சென்றடையாது என்பதுதான் காட்டுகிறது. அவசர கோளத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்.

சொன்னதை செய்ய மாட்டோம் என்பது போல் தான் தி.மு.க அரசு நடந்து கொள்கிறது. பெண்களின் பெரிய ஆயுதம் கண்ணீரும் மௌனம் தான். அது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கு எதிராக புதிய தமிழகம் மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, "மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க அரசு வெறும் வாய் சவுடாலாக மட்டுமே பேசி வருகிறது. தி.மு.க அரசு ஆட்சியா? மக்கள் நலனா? என்று வரும் போதெல்லாம் மக்கள் நலன் மட்டுமே காவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு, காவிரி நீர் பங்கீடு என அனைத்து பிரச்சனைகளிலும் தி.மு.க அரசு அவ்வாறே செயல்பட்டு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டில் விவகாரத்தில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வேண்டும் என்பதற்காக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் திமுக சுயநலமாக செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது தி.மு.க இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் வரும் 6 ஆம் தேதி துவங்கி தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பூரண மது விலக்கு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

மேலும், வரும் ஜூலை 15ஆம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் முன்பு பெண்களை திரட்டி மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆகஸ்ட் 15க்குள் 100 பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்" என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

இதையும் படிங்க: தென்காசி: வியாசா கல்லூரியில் நடந்த வேற லெவல் தேர்தல்.. மாணவிகள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

Last Updated : Jul 8, 2023, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.