ETV Bharat / state

'இங்கு அன்பும் அளிக்கப்படும்' - இப்படிக்கு நெல்லை தற்காலிக முகாம்! - Tirunelveli News

திருநெல்வேலி: கரோனா தற்காலிக முகாமில் தங்கியுள்ள பாட்டிக்கு மாலை மரியாதையுடன் கேக் வெட்டி 88ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு அன்பும் அளிக்கப்படும் -இப்படிக்கு நெல்லை தற்காலிக முகாம்!

author img

By

Published : May 9, 2020, 2:21 PM IST

ஊரடங்கு காரணமாக சாலையில் திரியும் ஆதரவற்றவர்களுக்கென திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தற்காலிக முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு தினமும் உணவு, உளவியல் பயிற்சி, திரைப்படம் திரையிடல், யோகா உள்ளிட்டவை நடத்தப்பட்டுவருகின்றன. இதன்மூலம் சிலர் வேலைக்குச் சென்று சொந்த காலில் நிற்கவும் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடியைப் பூர்விகமாகக் கொண்ட கோமதி என்ற 88 வயது பாட்டியும் திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் தற்காலிக சிறப்பு முகாமில் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் சென்னையில் பிரபல நிறுவன ஆடிட்டரின் உதவியாளராகப் பணிபுரிந்து 1997இல் இறந்துவிட்டார்.

ஒரே மகனும் வெளிநாட்டில் இருந்ததால் முதியோர் இல்லத்தில் பணம் கட்டிச்சேர்ந்துள்ளார். 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. மகனால் பணம் கட்டமுடியாததால், இல்லத்திலிருந்து 2007இல் வெளியேற்றப்பட்டார்.

அப்போது ஆரம்பித்த பிரச்னை ஊர் ஊராக பேருந்து நிலையம், கோயில், தெரு என மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் தனது வாழ்க்கையை மனவேதனையுடன் கழித்துவந்துள்ளார். எவ்வளவு முயன்றும் தனது மகனைத் தொடர்புகொள்ள முடியாததால், திருச்செந்தூர் கோயிலில் தர்மம் எடுத்து தனது வயிற்று பிழைப்பை நடத்திவந்துள்ளார்.

இதனையடுத்து தற்போது, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால், திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்கு மீண்டும் வந்தார். அங்கு மாநகராட்சி ஊழியர்கள் அவரை மீட்டு தற்காலிக முகாமில் தங்கவைத்தனர்.

இங்கு அன்பும் அளிக்கப்படும் -இப்படிக்கு நெல்லை தற்காலிக முகாம்!

இந்நிலையில் அவரது 88ஆவது பிறந்தநாளை முகாமில் உள்ளவர்கள் கொண்டாட முன்வந்தனர். அதனடிப்படையில் முகாம் வளாகத்திற்குள் மாலை மரியாதையுடன் வாகனத்தில் வலம்வந்த அவர் முகாமில் உள்ள தன்னைப்போல் ஆதரவற்றவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். தொடர்ந்து நாடக கலைஞர்கள் அவருக்குப் பிடித்தமான பாடல்களுக்கு நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கோமதி பாட்டி முதுநிலை இயற்பியல் பட்டதாரி என்பது கூடுதல் சிறப்புத் தகவல்.

இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.