ETV Bharat / state

நெல்லை தம்பதியிடம் கொள்ளை: 5 தனிப்படை அமைத்து விசாரணை!

திருநெல்வேலி: தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதியிடம் ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட முயன்ற முகமூடி கொள்ளையளர்களை, ஐந்து தனிப்படை அமைத்து தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

investigation,robbery
author img

By

Published : Aug 22, 2019, 4:40 AM IST

திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் தனிமையில் வசித்துவந்த சண்முகவேல், செந்தாமரை தம்பதயின் வீட்டில் கடந்த 12ஆம் தேதி இரவு கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களை இருவரும் சேர்ந்து அடித்து விரட்டினர். இருந்தும் செந்தாமரை கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் அவர்கள் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் நெல்லை தம்பதியினர் புகழ்பெற்றனர். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கைகளால் அவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில், அவர்களிடம் கொள்ளையடித்துச் சென்ற நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தடயங்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.

Intro:நெல்லை மாவட்டம் கடையத்தில் தனியாக வீட்டில் இருந்த முதிய தம்பதிகளிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவத்தில் தடையங்கள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பேட்டி.Body:

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நெல்லை மாவட்டம் கடையத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர்களிடம் முகமூடி கொள்ளையர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது எனவும் அந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள், தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் முழு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்ட பிறகு குற்றவாளிகள் குறித்து முழு தகவல் தெரிவிக்கப்படும் என கூறிய அவர் கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு உட்கோட்டங்களில் இருந்து இரண்டு தனிப்படைகளும் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் ஒரு தனிப்படையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது, அது மட்டுமின்றி இரண்டு காவலர்கள் கொண்ட தனிப்படை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் மேலும் கொள்ளை முயற்சி நடந்த வீடு அருகே துப்பாக்கி காணாமல் போனது குறித்து இதுவரை எந்த புகாரும் காவல் துறைக்கு கிடைக்கப்பெறவில்லைஎனவும் அப்படி ஏதேனும் புகார் இருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பேட்டி - அருண் சக்திகுமார் ( காவல் கண்காணிப்பாளர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.