ETV Bharat / state

ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.12 லட்சம் பறிமுதல் - 12 lakhs seized by election flying squad in thirunelveli

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த திருநகர் பகுதியில், பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 12 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

தேர்தல் பறக்கும் படையினர்
ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சம் பறிமுதல்
author img

By

Published : Apr 4, 2021, 9:48 AM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் ஆணையம், பறக்கும் படைகள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படையினர்
ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.12 லட்சம் பறிமுதல்

இந்நிலையில் பறக்கும் படை வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான அலுவலர்கள், திருநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், 12 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனைப் பறிமுதல்செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணையில் பாளை பெருமாள்புரம் பகுதியில் உள்ள தனியார் கேஸ் நிறுவனத்திலிருந்து வங்கிக்கு எடுத்துச் சென்றதாக, பணத்தைக் கொண்டுவந்த மகேஷ் தெரிவித்தார். உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கைப்பற்றிய பொருள்களைக் கணக்கில் காட்டாத காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.