ETV Bharat / state

30 முட்டைகளுடன் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு! - palayangottai

நெல்லை: பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் மீன் பண்ணை அருகில் உள்ள முட்புதரில் 30 முட்டைகளுடன் பதுங்கி இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

மலைபாம்பு
author img

By

Published : Jul 4, 2019, 5:54 PM IST

நெல்லை மாவட்டத்தில் கடந்த 92-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போது தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஏராளமான மலைப்பாம்புகள் ஆற்றின் வழியாக நகர்ப் பகுதியில் உள்ள வயல்வெளிகள், புதர் பகுதிகளில் தஞ்சமடைந்தன. அன்றைய தினத்திலிருந்து ஆற்றுப் பகுதி, ஆற்றங்கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் இதுவரை ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டுவிடப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான மீன் பண்ணை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன் கழிவுகளை தின்பதற்காக வந்த மலைப்பாம்பு ஒன்று அதன் அருகில் உள்ள முட்புதரில் தங்கி, ஒரு பெரிய குழி அமைத்து அதில் 30 முட்டைகளைவிட்டு அதன்மீது சுருண்டு அடைகாத்த நிலையிலிருந்து வந்துள்ளது.

மலைப்பாம்பின் முட்டைகள்

இதனைப்பார்த்த மீன் பண்ணை பணியாளர்கள் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்குப் பின் புதரில் பதுங்கி இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, அதனுடன் இருந்த 30 முட்டைகளையும் மீட்டு பொன்னாக்குடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

30 முட்டைகளுடன் பதுங்கி இருந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

இதனையடுத்து, பாம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்பு வனத்துறையினர் அதனைப் பத்திரமாக பாபநாசம் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர். அதன் முட்டைகளை 35 நாட்கள் பத்திரமாகப் பாதுகாத்து, குட்டிகளாகிய பிறகு அதனை வனப்பகுதியில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

Intro:நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் மீன் பண்ணை அருகில் உள்ள முட்புதரில் 30 முட்டைகளுடன் பதுங்கி இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.  அதன் முட்டைகள் 35 நாட்கள் பராமரிப்புக்கு பிறகு பாம்பு குட்டிகளாக மாறியபிறகு வனத்தில் விடப்போவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.Body:நெல்லை மாவட்டத்தில் கடந்த 92-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போது  தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஏராளமான மலைப்பாம்புகள் ஆற்றின் வழியாக நகர் பகுதியில் உள்ள வயல்வெளிகள் , புதர் பகுதிகளில் தஞ்சம் அடைந்தது. அன்றைய தினத்தில் இருந்து ஆற்றுப் பகுதி, ஆற்றங்கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் இதுவரை ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டுவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன் கழிவுகளை திண்பதற்காக வந்த மலைப்பாம்பு ஒன்று அதன் அருகில் உள்ள முட்புதரில் தங்கி அங்கு ஒரு பெரிய குழி அமைத்து அதில் 30 முட்டைகளையிட்டு அதன்மீது சுருண்டு அடைகாத்த நிலையில் இருந்துள்ளது. இதனைப்பார்த்த மீன் பண்ணை பணியாளர்கள் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்கு பின் புதரில் பதுங்கி இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றும் அதனுடன் இருந்த 30 முட்டைகளையும் மீட்டு பொன்னாக்குடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை வனத்துறை மருத்தவர்கள் வரவழைக்கப்பட்டு பாம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்பு வனத்துறையினர் அதனை பத்திரமாக பாபநாசம் வனப்பகுதியில்  கொண்டுவிட்டனர். அதன் முட்டைகளை 35 நாட்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு அது குட்டிகளாகிய பிறகு அதனை வனபகுதியில் விடப்படும் என்றும்  தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.