ETV Bharat / state

குழந்தை பெற்ற பள்ளி மாணவி: போக்சோவில் கைதான இளைஞர்

author img

By

Published : Feb 13, 2021, 6:50 AM IST

தேனி: பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணையில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

pocso
pocso

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிப்ரவரி 6ஆம் தேதி 17 வயது பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலான குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணையில், பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அதே பகுதியில் வசித்து வரும் வல்லரசு(22) என்ற இளைஞருடன் பழகியுள்ளார்.

அப்போது, அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழு சார்பில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர் வல்லரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.