கரோனா நோய் பரவலால் குடிபெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, கடந்த சில தினங்களாக மூன்று கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நான்காவது கட்டமாக மகாராஷ்டிரா மாநில தொழிலாளர்கள் 688 பேர் அனுப்பி இன்று பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சாத்தாகோவில்பட்டியிலிருந்து அரசுப் பேருந்தில் சென்ற மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவாஜி ராம்தன்(45) என்பவர், எச்சில் துப்புவதற்காக பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் நின்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஓடும் பேருந்திலிருந்து விழுந்த அந்நபர், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்த பிடிபட்ட 8 அடி பாம்பு