ETV Bharat / state

வீட்டை ஏலம் விட்டதால் வங்கி முன் மண்ணெண்ணெய் கேனுடன் பெண் தர்ணா!

தேனி: வீட்டுக்கடன் செலுத்திய பின்பும் தனது வீட்டை ஏலம் விட்டதாக கூறி, வங்கி முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்ட‌ பெண்ணை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

women dharna in front of bank with kerosene  women dharna with kerosene in theni  House auctioned women dharna in front of bank at theni  வங்கி முன் மண்ணெண்ணெய் கேனுடன் பெண் தர்ணா
women-dharna-with-kerosene-can-in-front-of-bank
author img

By

Published : Mar 2, 2021, 9:48 AM IST

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே உள்ள திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (37). இவரது கணவர் கருப்பையா (45) கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது வீட்டில் முதல் தளம் கட்டுவதற்காக ரூபாய் 5 லட்சம் வீட்டுக்கடனை கடந்த 2011 ஆம் ஆண்டு தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட (யூகோ) வங்கியில் பெற்றுள்ளார். 15 வருட தவணையில் பெற்ற கடனுக்கு இதுவரை 7 லட்சம் வரை வங்கியில் செலுத்தியுள்ள நிலையில் தனது வீட்டை வங்கி நிர்வாகம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஏலம் விட்டதாக கூறிய முத்துலட்சுமி, வங்கியின் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக எச்சரித்தார்.

வங்கி முன் மண்ணெண்ணெய் கேனுடன் முத்துலட்சுமி தர்ணா

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்துலட்சுமியை தேனி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், வீட்டுக்கடனாக ரூ.5 லட்சம் வாங்கியதற்கு, இதுவரை மாதத்தவனையாக ரூ.7லட்சம் வரை கட்டியுள்ளேன். இந்நிலையில் கூடுதலாக 5 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்கிடையே வங்கியில் இருந்து தற்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தனது வீட்டை ஏலம் விட்டுள்ளனர். மேலும் ஏலம் விட்டதாக கூறப்படும் தன்னுடைய வீட்டை பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும் என்றார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் நவீன் நாயக்கிடம் விளக்கம் கேட்ட போது, கடன் தவணையை சரிவரக் கட்டாமல் இருந்ததால் அவருக்கு முறையான நோட்டீஸ் அனுப்பிய பின்பு தான் வீடு ஏலத்திற்கு விடப்பட்டதாகத் தெரிவித்தார். வங்கி முன்பாக பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்ட‌ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மாட்டு வண்டி பந்தயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.