ETV Bharat / state

பெண் மீது மோதிய பேருந்து - பொதுமக்கள் சாலை மறியல்!

தேனி: பெரியகுளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அரசுப்பேருந்து மோதியதை அடுத்து, அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்து மோதி பெண் படுகாயம்
author img

By

Published : May 21, 2019, 5:29 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது அரசுப்பேருந்து மோதியது. இதில் கைலாசபட்டியைச் சேர்ந்த நாகஜோதி(38) என்ற பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அப்பகுதியில் தொடர்ந்து விபத்து நிகழ்வதாகக்கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிபாளர் பாஸ்கரன், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

மேலும் இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

சுப.பழனிக்குமார் - தேனி.           21.05.2019.

                பெரியகுளம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசுப்பேருந்து மோதியதில் படுகாயம், தொடர்ந்து அதே பகுதியில் சாலை விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு.

     தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசாபட்டியில் இன்று உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கைலாசபட்டியை சேர்ந்த நாகஜோதி(38) என்ற பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

     இதனிடையே  அப்பகுதியில் தொடர்ந்து நிகழும் சாலை விபத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஏற்படும் சாலை விபத்தை தடுக்க, காவலதுறையினர் சார்பில் சாலையில் பேரிகார்டுகளை அமைத்திருந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன், வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லபட்டதால் மீண்டும் விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

     இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. பின்னர் வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிபாளர் பாஸ்கரன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_21_ROAD ACCIDENT MARIYAL_VIS_7204333

2)      TN_TNI_02a_21_ROAD ACCIDENT MARIYAL_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.