ETV Bharat / state

வீடு, வாகனத்தை சேதப்படுத்திய ஆட்கொல்லி யானை - அச்சத்தில் மேகமலை மக்கள் - ஒற்றை யானை

குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் இதன் காரணமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த ஆட்கொல்லி யானையை பிடித்து முகாம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

wild elephant destroy residential area
wild elephant destroy residential area
author img

By

Published : Jan 8, 2021, 6:45 AM IST

தேனி: மேகமலை பகுதியில் ஆட்கொல்லி யானையின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம். இருசக்கர வாகனங்கள், குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்டது மேகமலை, இரவங்கலாறு, மேல் மணலாறு, கீழ் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, மகாராணி மெட்டு ஆகிய 7 மலைக்கிராமங்கள். கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீ உயரத்தில் உள்ள அப்பகுதி மேகமலை வன உயரின சரணாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளை புலி, சிறுத்தை, யானை, கரடி, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிப்பிடமாகக் கொண்டுள்ளன.

ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். இப்பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேல் மணலாறு பகுதியில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் அமாவாசை, அவரைத் தொடர்ந்து 24ஆம் தேதி தொழிலாளி முத்தையா ஆகிய இருவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் வசிப்பதற்கே பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர்.

மேலும், அந்த ஆட்கொல்லி யானையை பிடித்து முகாம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மேகமலை பகுதி மக்களின் அச்சம் குறைவதற்குள் நேற்றிரவு (ஜனவரி 7) மீண்டும் ஆட்கொல்லி யானை தனது அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளது. இரவங்கலாறு பகுதியில் உள்ள வாசுமலை, முருகன், புஸ்பலதா மற்றும் லட்சுமணன் ஆகிய 4 நபர்களது வீடுகல், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் இதன் காரணமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த ஆட்கொல்லி யானையை பிடித்து முகாம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.