தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேகமலையில் யானை, சிறுத்தை, புலி, கரடி, அரிய வகை குரங்குகள் உள்பட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக மேகமலையில் சுற்றித் திரியும் காட்டு யானை ஒன்று அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த யானையின் தாக்குதலால், இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தற்போது தொழிலாளி ஒருவரை காட்டு யானை துரத்தும் காணொலி வெளியாகியுள்ளது. மணலாறு பகுதியில் இருந்து வட்டவடைக்குச் செல்லும் வழியில் நடந்து சென்ற தொழிலாளி டேவிட் என்பவரை காட்டு யானை வேகமாக துரத்திச் செல்கிறது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு மரண பயத்தில் டேவிட் ஓடி தப்பித்தார்.
இதையும் படிங்க: யானை மீது எரியும் டயரை வீசும் நபர்கள் - பதைபதைக்க வைக்கும் காணொலி