ETV Bharat / state

என்ன தான் நடக்கிறது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்? - சு.வெங்கடேசன் கேள்வி

author img

By

Published : Apr 5, 2020, 7:11 PM IST

தேனி: கரோனா நோயாளி ஒருவர் இறந்ததையடுத்து, நேற்று மாலை தேனி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

venkadesan
venkadesan

உலக நாடுகளை தன் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள கரோனா என்கிற அரக்கன். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய, நாடு முழுவதும் 52 ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் இரண்டாவது இடமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி மாநாட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றது தெரியவந்தது.

இதையடுத்து மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது மருத்துவக் கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போடியைச் சோந்த நபரின் மனைவி நேற்று (ஏப்ரல்-4) உயிரிழந்தார். இதனையடுத்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நேற்றிரவு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"கரோனா நோயாளிகளை கையாள்வது, சிகிச்சையளிப்பது உள்ளிட்ட விசயங்களில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் உள்ள பிரச்னை சம்பந்தமாக நேற்று முகநூலில் தெரிவித்திருந்தேன். நேற்று பிற்பகல் கரோனா நோயாளி ஒருவர் இறந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேனி கல்லூரியின் முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறையான கண்காணிப்பு இல்லாதததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் எழுப்பப்பட வேண்டிய முக்கியக் கேள்வி, புதன் கிழமை காலை 11 மணிக்கு அந்த நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு கோவிட்-19 பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலைதான் வந்திருக்கிறது.

மூன்றரை மணி நேரத்தில் நாங்கள் சோதனைகளை செய்து முடிக்கிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இங்கு 50 மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருக்கிறது. கோவிட்-19 சோதனைக்கான முழு வசதியுள்ள மருத்துவமனை தேனி அரசு மருத்துவமனையாகும்.

இங்கிருந்து வேறு எந்த ஆய்வகத்துக்கும் மாதிரிகளை அனுப்பி உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை. அப்படியிருந்தும் பரிசோதித்து சொல்ல இரண்டு நாட்களுக்கு மேல் ஏன் ஆகிறது? இதில் அரசு பின்பற்றும் நடைமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும்" என அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: விளக்கு ஏற்றுவது தமிழர் பாரம்பரியம் - அமைச்சர் உதயகுமார் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.