ETV Bharat / state

ஒருமாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

தேனி: ஆண்டிப்பட்டி அருகே ஒருமாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

EMPTY BOWLS
author img

By

Published : Aug 4, 2019, 5:22 PM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த கிராமத்திற்கு வைகை - சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு வரும் குடிநீரை சிலர் திருட்டுத்தனமாக குழாய் அமைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

WATER ISSUE  AANDIPATTI  ROAD STRIKE  சாலை மறியல்
ஒரு மாதமாக தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை

இதனால் கிராமத்திற்கு கிட்டதட்ட ஒருமாத காலமாக சரிவர குடிநீர் வரவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

WATER ISSUE  AANDIPATTI  ROAD STRIKE  சாலை மறியல்
ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று ஆண்டிபட்டி - வத்தலக்குண்டு சாலையில்

இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று ஆண்டிபட்டி - வத்தலக்குண்டு சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கிராம மக்கள் சாலை மறியல்

மேலும் ஓரிரு நாட்களில் தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராமமக்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஆண்டிப்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro: ஆண்டிபட்டி அருகே ஒருமாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் சாலைமறியல். காவல் துறையினர்; பேச்சுவார்த்தை.
Body: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் தி.அணைக்கரைப்பட்டி கிராமம் உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் வைகை - சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு வரும் தண்ணீரை அந்த பகுதியை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக குழாய் அமைத்து குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வரவே இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தி.அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தி.அணைக்கரைப்பட்டி கிராம பொதுமக்கள் இன்று ஆண்டிபட்டி - வத்தலக்குண்டு சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும்,குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துiறியனர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஓரிரு நாட்களில் தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யாத பட்சத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட போவதாக மக்கள் எச்சரித்துள்ளனர்.

Conclusion: பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஆண்டிப்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.