ETV Bharat / state

முதல் போக பாசன வசதிக்காக  மஞ்சளாறு அணையிலிருந்து நீர் திறப்பு! - Theni Manjalar Dam

தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் முதல் போக பாசன வசதிக்கான நீரை, மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.

Manjalar Dam
author img

By

Published : Nov 3, 2019, 7:12 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, அதன் முழுக் கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.

அதனால், அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி அடையும் வகையில் மஞ்சளாறு அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக அணையின் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிக்குச் செல்லக்கூடிய மதகுப்பகுதிகளுக்கு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் மதகுப்பகுதியில் வெளியேறிய தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மலர்த் தூவி வரவேற்றார்.

இதனால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி பகுதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் கணவாய்ப்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம், கன்னுவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 386 ஏக்கர் பழைய ஆயக்கட்டுப் பகுதிக்கும், ஆயிரத்து 873 ஏக்கர் புதிய ஆயக்கட்டுப் பகுதிக்கும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் முதல் போக சாகுபடியில் நீரினைப் பெறும்.

அணையின் நீர் இருப்பை பொறுத்து, இன்று முதல் 135 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 282 கன அடியாகவும் உள்ளது.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை , வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு!

Intro: தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதல் போக பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு.
தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.

Body: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தையொட்டி அனைத்து இடங்களிலும் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு அணைகள் வேகமாக நிரம்பி தொடங்கின. இதன் தொடர்ச்சியாக தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.
இதனைத்தொடர்ந்து அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இன்று மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி அடையும் வகையில் மஞ்சளாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அணையின் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிக்கு செல்லக்கூடிய மதகுப்பகுதிகளுக்கு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் மதகுப்பகுதியில் வெளியேறிய தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி வரவேற்றார்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கணவாய்ப்பட்டி, வத்தலகுண்டு, சிவஞானபுரம், கன்னுவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 3386 ஏக்கர் பழைய ஆயக்கட்டு, 1873ஏக்கர் புதிய ஆயக்கட்டு ஆக மொத்தம் 5259ஏக்கர் நிலங்கள் முதல் போக சாகுபடி வசதி அடையும். அணையின் நீர் இருப்பை பொறுத்து இன்று முதல் 135நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 435.32மி.கன அடியாகவும், நீர் வரத்து 282கன அடியாக உள்ளது.

Conclusion: இந்நிகழ்வில் பொதுப்பணி, வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி : பல்லவி பல்தேவ் (மாவட்ட ஆட்சியர், தேனி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.