தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில் மஞ்சளார் அணையின் (Manjalar Dam) நீர்பிடிப்புப் பகுதியான எலிவால் அருவியில், நீர் வரத்து குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் டம்டம் பாறை பகுதியில் வாகனத்தை நிறுத்தி, அருவியைக் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்துச்செல்வது வழக்கம்.
இந்நிலையில் டம்டம் பாறைக்கு எதிரே உள்ள எலிவால் அருவியின் நீர்பிடிப்புப் பகுதியில் போதிய அளவு மழை பெய்யாத நிலையில், அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுவதால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படும் எலிவால் அருவியை கண்டு ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு