ETV Bharat / state

தேனி மாவட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு

author img

By

Published : Nov 16, 2020, 5:30 PM IST

தேனி: மாவட்டத்துக்குள்பட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார்.

voters in theni
voters in theni

தமிழ்நாடு சட்டப்பேரைத் தேர்தல் நெருங்கும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவருகிறது. அதன்படி தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார்.

2020 ஜனவரி 1ஆம் தேதியை தகுதியேற்ப நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பட்டியலில் மாவட்டத்துக்குள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஐந்து லட்சத்து 37 ஆயிரத்து 988 ஆண்கள், ஐந்து லட்சத்து 55 ஆயிரத்து 339 பெண்கள், 172 இதரர் வாக்காளர் என மொத்தம் 10 லட்சத்து 93 ஆயிரத்து 489 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாகப் பட்டியல்:

ஆண்டிபட்டி தொகுதி:

ஆண்கள் - 1,33,659, பெண்கள் - 1,36,149, இதரர் - 25, மொத்தம் - 2,69,833

பெரியகுளம் (தனி) தொகுதி :

ஆண்கள் - 1,35,225, பெண்கள் - 1,39,667, இதரர் - 98, மொத்தம் - 2,74,990

போடிநாயக்கனூர் தொகுதி:

ஆண்கள் - 1,32,584, பெண்கள் - 1,37,208, இதரர் - 18 மொத்தம் - 2,69,810

கம்பம் தொகுதி :

ஆண்கள் - 1,36,520, பெண்கள் - 1,42,305, இதரர் - 31 மொத்தம் - 2,78,856.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "2020 பிப்ரவரி 14ஆம் தேதிமுதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காகப் பெறப்பட்ட மனுக்களை உரிய கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 93 ஆயிரத்து 489 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகம், நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இவற்றைப் பொதுமக்கள் சரிபார்த்து தங்களது விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம்.

தவறு இருந்தால் திருத்த மனுக்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர்/வருவாய்க் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

அல்லது சிறப்பு முகாம் நாள்களான 21.11.2020, 22.11.2020, 12.12.2020, 13.12.2020 ஆகிய தேதிகளில் காலை 09.30மணி முதல் மாலை 05.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், ஒரு தொகுதிக்குள் முகவரி மாற்றம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.