தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான அலுவலர்கள், அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இதில், புதிதாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள், ஆவணங்கள், ரொக்கப் பண இருப்பு உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டன. இந்தச் சோதனையில், கணக்கில் வராத 1 லட்சத்து 870 ரூபாய் பணமும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக போடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: மரம் விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு!