ETV Bharat / state

தேனி அருகே விவசாயி வீட்டிற்கு விசிட் அடித்த கரடி வீடியோ! - theni district news

விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடிக்கு 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

தேனி அருகே விவசாயி வீட்டிற்கு விசிட் அடித்த கரடி வீடியோ

author img

By

Published : Feb 15, 2023, 7:34 AM IST

தேனி அருகே விவசாயி வீட்டிற்கு விசிட் அடித்த கரடி வீடியோ

தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் மலைப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை குடிநீருக்காக கீழிறங்கிய 6 வயது கரடியை 3 நாய்கள் விரட்டியதால் மாரிமுத்து என்ற விவசாயியின் வீட்டிற்குள் புகுந்தது.

இதனை கூண்டு வைத்து பிடிக்க நேற்று காலை முதலே ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள் தலைமையிலான வனத்துறையினர் முயற்சி செய்தனர். கரடியை பிடிக்கும் முயற்சி பலன் அளிக்காததால் சிறப்பு வன உயிரின மருத்துவர் கலைவாணன் வரவழைக்கப்பட்டு ஜன்னல் வழியாக வெடி வைத்து கூண்டிற்குள் கொண்டு வரப்பட்ட கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

நேற்று காலை முதல் அச்சுறுத்தி வந்த கரடியை எட்டு மணி நேரத்திற்குப் பிறகு பிடித்த வனத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அடர் வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்தனர். இதனிடையே கிராம மக்களை மிரட்டி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையும் படிங்க: கம்பத்தில் தயாராகும் காதலர்களை கவர்ந்திழுக்கும் பரிசுப்பொருட்கள்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.