தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதியான போடிமெட்டு மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சாலையில் மழை நீர் வெள்ளம்போல் ஓடுகிறது.
மேலும், மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் போடிமெட்டு மலைப்பாதையில் இன்று (அக்.16) வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி நெடுஞ்சாலைத்துறையினரும் காவல்துறையினரும் நேற்றிரவில் இருந்து வாகனங்கள் செல்வதற்கு தடைவித்துள்ளனர்.
சாலைகள் சீரடைந்து வாகனங்கள் செல்ல ஏதுவாக சூழ்நிலை அமைந்த பின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சில வாகனங்கள் போடிமெட்டு சாலையை கடந்து செல்கின்றன.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு