ETV Bharat / state

தமிழ்நாடு-கேரள வாகன போக்குவரத்து நிறுத்தம்!

தேனி: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 21, 2020, 6:43 PM IST

பொதுமக்களை சோதனை செய்த அலுவலர்கள்
பொதுமக்களை சோதனை செய்த அலுவலர்கள்

சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் பொதுமக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய இந்தக் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.

மேலும் இந்தக் கரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்தக் கரோனா வைரசின் தாக்கம் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுவதால் தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு போன்ற வழித்தடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ளே வரக்கூடியவர்கள் தீவிர பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதியளிக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு அரசு சார்பாக லோயர்கேம்ப் பகுதி, கம்பம்மெட்டு அடிவாரப்பகுதி, போடி மெட்டு முந்தல் சோதனைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றுமுதல் பிற மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருள்களான பால், காய்கறி, மருத்துவப் பொருள்கள் ஏற்றிக் கொண்டுவரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு வரும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் அனைவருக்கும் நோய்கள் இருக்கிறதா எனத் தீவிர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு எல்லையான லோயர்கேம்பிலும், கம்பத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளா செல்லும் பொதுமக்கள் நடந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று கேரள மாநிலத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்களை எல்லைப்பகுதியில் கிருமி நாசினிகள் கொண்டு கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு உள்ளே செல்ல கேரளா சுகாதாரத் துறையினர் அனுமதிக்கின்றனர்.

பொதுமக்களைச் சோதனைசெய்த அலுவலர்கள்

இரு மாநில காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இரு மாநில எல்லைப் பகுதியிலும் காவல் துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம்: சீனர்கள் போன்ற தோற்றமளித்த ஜப்பானியர்களால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.