ETV Bharat / state

பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு 'கலைஞர் நினைவு வித்தகர் விருது' வழங்கி கவுரவம் - Kalaignar memorial award

கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

விருதாளர்கள் பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா
விருதாளர்கள் பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா (Credit - TNDIPR)

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை கவிஞர் மு. மேத்தா-வுக்கும், பின்னணிப் பாடகி பி.சுசீலா-வுக்கும் வழங்கினார்.

விருது குறித்த தகவல்: செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசின் சார்பில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரில் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளான்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ஆம் ஆண்டுக்கான 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்' விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத் துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ்-க்கு கடந்த 3.6.2022 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

பி.சுசீலாவுக்கு விருது ஏன்?: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட தமிழக முதலமைச்சர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், 'தென்னிந்தியாவின் இசைக்குயில்' என்றும், 'மெல்லிசை அரசி' என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலா-வுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தா-வுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, தமிழக முதலமைச்சர் இன்றைய தினம், கருணாநிதி நூற்றாண்டு நினைவாக கவிஞர் மு. மேத்தா-வுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலா-வுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

பி.சுசீலா வெளியிட்ட வீடியோ: விருது பெற்றுக்கொண்ட பின்னணி பாடகி சு.சுசீலா முதலமைச்சரிடம் மு.க.ஸ்டாலினிடம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதி 'காகித ஓடம்' பாடலை பாடி அகம் மகிழ்ந்தார். பின்னர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "கலைஞர் நினைவு விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். 15 வயதில் கருணாநிதியின் பாதங்களை தொட்டு வணங்கினேன். தமிழகம் எனக்கான பெரிய அடையாளங்களை கொடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.