ETV Bharat / state

“நம் மாணவர்கள் உலகளவில் போட்டியிட வேண்டும்” - வைரமுத்து - vairamuthu education trust

தேனி: புதிய கல்விக் கொள்கை என்பது அவரவர் தாய்மொழியை முதன்மையாகக் கொண்ட கல்வியாக இருக்க வேண்டும் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu supporting govt school students
author img

By

Published : Jul 20, 2019, 8:02 AM IST

தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில், 12ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்பு கற்க வசதி இல்லாமல் தவிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு, வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு வருடமும் கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நிதி உதவி வழங்கும் விழா பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

“வைரமுத்து கல்வி அறக்கட்டளை” நிதியுதவி வழங்கும் விழா

இவ்விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து ஐந்து மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவியாக தலா 20ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஜாதி, மதம், மொழி, இனம், இடம் எனப் பிரிந்து கிடந்த மனிதனை கடவுள், இயற்கை, என எதுவும் ஒன்று சேர்க்கவில்லை. பிரிந்து கிடந்த மனிதனை ஒன்று சேர்த்திட வந்த மந்திரம் கல்வி என்கிற கருவி தான் என்பதை இந்த மண் மறந்து விடக்கூடாது. கல்வியால் மட்டுமே நாம் அனைவரும் ஒன்றிணைய முடியும் என முன்னோர்கள் வகுத்தார்கள்.

அறிவு என்பது விதையைப் போலத் தூவப்பட வேண்டுமே தவிர, ஆணியைப் போல அடித்து விடக்கூடாது. தமிழின் பெருமைகளைத் தவிர்த்து விட்டு, வெளிநாட்டு, பிற மாநில அறிவை திணித்து விட முற்பட்டால் அதனைக் கடைசி தமிழன் உள்ளவரை எதிர்ப்பான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கனவு காணும் தந்தையர், ஒவ்வொருவரும் மது அருந்த மாட்டோம் என அவரவர் பிள்ளைகளிடம் சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

விழாவின் இறுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தான் எழுதி வெளியான திருமுருகாற்றுப்படை எனும் புத்தகத்தை இலவசமாக வைரமுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கெங்குவார்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Intro: புதிய கல்விக் கொள்கை என்பது அவரவர் தாய்மொழியை முதன்மையாகக் கொண்ட கல்வியாக இருக்க வேண்டும். கவிஞர் வைரமுத்து தேனியில் பேச்சு.

Body: கவிஞர் வைரமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு கற்க வசதி இல்லாமல் தவிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு வருடமும் கல்வி நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நிதி உதவி வழங்கும் விழா தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து 5 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவியாக தலா 20ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஜாதி, மதம், மொழி, இனம், இடம் என பிரிந்து கிடந்த மனிதனை கடவுள், இயற்கை, என எதுவும் ஒன்று சேர்க்கவில்லை. பிரிந்து கிடந்த மனிதனை ஒன்று சேர்த்திட வந்த மந்திரம் கல்வி என்கிற கருவி தான் என்பதை இந்த மண் மறந்து விடக்கூடாது. கல்வியால் மட்டுமே நாம் அனைவரும் ஒன்றினைய முடியும் என முன்னோர்கள் வகுத்தார்கள். அத்தகைய கல்வி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றார். மேலும் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் மத்திய அரசு, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். அப்போது தான் தாய்மொழியின் சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். தாய் மொழியை முதன்மையாக படித்து விட்டு பிற மொழிகளை கற்கட்டும். எங்கள் பிள்ளைகள் மீது மொழியை திணிக்கப்படக்கூடாது. அறிவு என்பது விதையை போல தூவப்பட வேண்டுமே தவிர, ஆணியை போல அடித்து விடக்கூடாது. தமிழின் பெருமைகளை தவிர்த்து விட்டு, வெளிநாட்டு, பிற மாநில அறிவை திணித்து விட முற்பட்டால் அதனை கடைசி தமிழன் உள்ளவரை எதிர்ப்பான் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிள்ளைகளின் எதிர்காலத்தை என்னி கனவு காணும் தந்தையர், ஒவ்வொருவரும் மது அருந்த மாட்டோம் என அவரவர் பிள்ளைகளிடம் சத்தியம் செய்ய வேண்டும். மேலும் பிள்ளைகளை டாக்டர், வழக்கறிஞர், என்ஜினியர் ஆக்குவேன் எனக் கூறுவதை விட நான் மது அருந்த மாட்டேன் என்று ஒவ்வொரு தந்தையும், தங்களது பிள்ளைகளுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி யில் கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஒரு அளவிற்கு நல்ல மதிப்பெண்களை எடுத்து ஏழ்மை நிலையில் கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றார் அதனடிப்படையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக 5 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவர் கல்வி ரீதியாக வழங்கினார் இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் இடையே அவர் பேசுகையில் ஜாதியால் மதத்தால் ஏழ்மையால் என பல்வேறு வழிகளில் பிரிந்து கிடந்த மனிதன் கல்வியால் தான் ஒன்றுபட முடியும் என முன்னோர்கள் கண்டறிந்த கல்வி வி என்பது ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி என்பதாக இருக்கக்கூடாது அனைவருக்கும் சங்கமம் சமமான கல்வியாக இருக்க வேண்டும் புதிய கல்வி கொள்கை என்பது உலகத்தோடு போட்டியிடுகின்ற அறிவாக இருக்க வேண்டும் அதற்கான பாடத்திட்டம் எங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படும் ஆனால் புதிய கல்விக் கொள்கையால் நாங்கள் எங்கள் தாய் மொழியை இழந்து விடக்கூடாது எங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது ஒவ்வொரு மாநில மொழிகளிலும் முதன்மையாக இருக்க வேண்டும் ஒவ்வொரு மாணவனும் அவரது அவரவர் தாய்மொழி கல்வியை முதலில் கற்று வெளிநாட்டு அறிவியலோடு போட்டி போட வேண்டும் அந்த தரமான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் மேலும் ஒவ்வொரு ஒவ்வொரு தந்தையும் தங்களது குழந்தைகளிடம் மது அருந்த மாட்டோம் என வாக்குறுதி கொடுக்க வேண்டுமென கல்வி நிதி வழங்கும் விழாவில் வைரமுத்து பேசினார்

Conclusion: விழாவின் இறுதியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது தான் எழுதி வெளியான திருமுருகாற்றுப்படை எனும் புத்தகத்தை இலவசமாக வைரமுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கெங்குவார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.