தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாகும். தற்போது, நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. அதன் காரணமாக இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தால் மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 971 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர் இருப்பு 5,434 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!