தேனி: வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. வைகை அணையின் முக்கிய நீராதரமாக திகலும் முல்லை பெரியாறு, மூல வைகை, கொட்டக்குடி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் குன்னூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் ஒன்றாக கலந்து பின்னர் வைகை அணைக்கு செல்கிறது.
இந்த நிலையில் வைகை அணைக்கு நீர் செல்லும் முக்கிய வழித்தடமான குன்னூரில் உள்ள வைகை ஆறு முழுவதும் ஆகாய தாமரைகளால் பரவி உள்ளது. அதனை உரிய முறையில் அகற்றப்படாமல் இருப்பதனால் ஆறு முழுவதும் ஆகாய தாமரையாக மாறியுள்ளது. இந்த ஆகாய தாமரை செடிகள் நீரை அதிகளவு உறிஞ்சும் தன்மை கொண்டதால் அணைக்கு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறை இதில் கூடுதல் கவனம் செலுத்தி குன்னூர் பகுதியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான்' - திண்டுக்கல் சீனிவாசன்