தேனி: வைகை அணை 71 அடி கொள்ளளவை கொண்டது. இந்த வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாய நிலங்களுக்கான தண்ணீர் தேவையை வைகை அணை பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி விவசாய நிலங்களுக்கும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பயன்பெறும் வகையில் 58ஆம் கால்வாய் பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து இன்று (செப்.28) நீர் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாய நிலங்களான 2284 ஏக்கர் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து 300 கனஅடி நீர் திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவிகள்...3 பேர் உயிரிழந்த பரிதாபம்