ETV Bharat / state

குழந்தையைப் பெற்றெடுத்த திருமணமாகாத மாணவி மரணம்: காவல் துறை விசாரணை - 17th year old girl Preganancy Death in Bodi

தேனி: போடி அருகே திருமணமாகாத 17 வயது செவிலியர் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், உடல்நலக்குறைவால் அந்த மாணவி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தேனி
தேனி
author img

By

Published : Jan 4, 2021, 7:08 PM IST

தேனி மாவட்டம் போடி அருகே 17 வயது சிறுமிக்கு தாய் - தந்தை இல்லாததால் தாத்தா -பாட்டி பராமரிப்பில் வளர்ந்துவந்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்துவந்த இவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்படவே போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு வந்தது வயிற்று வலி கிடையாது. பிரசவ வலி என்று கூறியுள்ளனர்.

மாணவி மரணம்

இதற்கிடையே மாணவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பின்னர் மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உடல்நலம் குன்றியதால் மேல்சிகிச்சைக்காக தாயும் - சேயும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார். பிறந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு இன்குபேட்டர் மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது.

புகார்

இது குறித்து சிறுமியின் தாத்தா, தங்கள் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தனது பேத்தியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் உறவு வைத்திருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் போடி ஊரக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர்களை டிஎன்ஏ பரிசோதனைக்குள்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனை, காவல் துறையினரின் விசாரணையின் முடிவில்தான் உயிரிழந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது யார், குழந்தையின் தந்தை யார்? என்ற விவரங்கள் தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.