தேனி ஆண்டிபட்டியில் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர், நாகராஜன். இந்நிலையில், சரவணன் என்பவர் நில மதிப்பீடு சான்றிதழுக்காக சென்றபோது 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் சரவணன் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், பவுடர் தடவிய 5ஆயிரம் ரூபாயை வட்டாட்சியர் நாகராஜனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் நாகராஜனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை ஆனது தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று ஆண்டிபட்டி வட்டாட்சியராகப் பணியாற்றிய நாகராஜன் லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வட்டாட்சியர் நாகராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அதனைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாத மெய்க்காவல் சிறைத் தண்டனையும், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கோபிநாதன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை சிறையில் அடைக்க காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மனு தள்ளுபடி!