ETV Bharat / state

ரேஷன் அரிசியை விற்றால் ரேஷன் கார்டு கட்.. ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு! - ரேஷன் அரிசி கடத்துபவர்களின் ரேஷன் கார்டு கட்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக இருமாநில அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

Officials of the two states held a Consultative meeting at cumbum to prevent ration rice smuggling from Tamil Nadu to Kerala
ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக கம்பத்தில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்
author img

By

Published : May 31, 2023, 2:05 PM IST

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக கம்பத்தில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்

தேனி: தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம் மெட்டு வழியாக கேரள பகுதிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு இரு மாநில அதிகாரிகளும் ஒன்றினைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் இருந்து தமிழக - கேரள எல்லை வழியாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும் என இரு மாநில குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ரேஷன் அரிசியை வியாபாரிகள் பொதுமக்களிடம் விலைக்கு வாங்கி அரிசியாகவும், ரைஸ்மில்களில் அரைத்து டன் கணக்கில் மாவாகவும் அரைத்து, தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனை சாவடி வழியாக கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் கொண்டு வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நடந்து வரும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இரு மாநில போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறை அதிகாரிகளும் இணைந்து கம்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

கூட்டத்தில் அரிசி பாரங்களை ஏற்றிக்கொண்டு எல்லை தாண்டி வரும் வாகனங்களின் துல்லியமான விவரங்களையும் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் தகவல்களையும் உரிய முறையில் சரி பார்த்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, உரிய ஆதாரமின்றி அரிசி மூட்டைகளை கடத்தி வருபவர்களை இரு மாநில அதிகாரிகளும் கூட்டு முயற்சி மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் எல்லைப் பகுதியில் ரோந்து பணிகளை செய்து துரித நடவடிக்கை எடுத்துச் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்துபவர்களின் ரேஷன் கார்டுகளை பறிமுதல் செய்து அவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு நலத்திட்ட உதவியும் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி இந்துமதி, மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு டி.எஸ்.பி பாலசுப்ரமணியம், கேரள மாநிலம் கட்டபனை டி.எஸ்.பி குரிய கோஸ், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரிக்கு உடந்தையான நெல்லை காவலர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.